2021 ஜனவரி 28, வியாழக்கிழமை

கண்காட்சியும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும்

Sudharshini   / 2016 ஜூலை 13 , மு.ப. 04:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எஸ்.எம்.முஜாஹித்

காரைதீவு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மகளிர் அபிவிருத்தி பயிற்சி நிலையத்தில், ஒரு வருட கால டிப்ளோமா பயிற்சியை பூர்;த்தி செய்த யுவதிகளுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வும், பிரதேச கண்காட்சியும் நேற்று செவ்வாய்க்கிழமை (12) பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

இதன்போது, பயிற்சி காலத்தின் போது  செய்யப்பட்ட கைவினைப் பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டதுடன், கைப்பணிப் பொருள் விற்பனையும் இடம்பெற்றது.

இந்நிகழ்வில், டிப்ளோமா பயிற்சியை பூர்;த்தி செய்த 30 யுவதிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டன.

காரைதீவு பிரதேச செயலாளர் திருமதி எஸ்.ஸ்ரீகாந்த் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், கிழக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் மாகாண பணிப்பாளர் கே.அருந்தவராஜா, அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்; கே.விமலநாதன், மாவட்ட கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் எச்.கலீலுர் ரஹ்மான், காரைதீவு பிரதேச செயலக கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் பி.கோகுலராஜன், கிராம அபிவிருத்தி திணைக்கள அதிகாரிகள், பிரதேச செயலக உத்தியோகத்தர்;கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .