2021 மார்ச் 06, சனிக்கிழமை

கர்ப்பிணிகளுக்கு பழுதான உணவு; நடவடிக்கை எடுக்கத் தீர்மானம்

Suganthini Ratnam   / 2017 ஜூலை 13 , பி.ப. 12:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

இறக்காமம் பிரதேச செயலகத்தால் கர்ப்பிணிகளுக்கு வழங்கப்படும் போஷாக்கு உணவுப் பொருட்கள் சுகாதாரத்துக்கு கேடு விளைவிக்கும் வகையில் உள்ளதெனத் தெரிவிக்கப்படும் விடயம் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுப்பதற்குத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இறக்காமம் பிரதேச அபிவிருத்தி குழுக் கூட்டம் இணைத் தலைவர்களான கிழக்கு மாகாணசபையின் எதிர்க்கட்சியின் தலைவர் எம்.எஸ்.உதுமாலெப்பை, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம்.மன்சூர், தேசிய காங்கிரஸின் இறக்காமம் பிரதேச அமைப்பாளர் எஸ்.எல்.மன்சூர் ஆகியோரின் தலைமையில் பிரதேச செயலகத்தில் இன்று நடைபெற்றது.

இதன்போது, பிரதேச செயலகத்தால் கர்;ப்பிணிகளுக்கு வழங்கப்படும் போஷாக்கு உணவுப் பொருட்கள் தொடர்பான புகார்; தொடர்பில் தேசிய காங்கிரஸின் இறக்காமம் பிரதேச அமைப்பாளர் எஸ்.எல்.மன்சூர் தெரியப்படுத்தினார்.

அண்மைக்காலமாக வழங்கப்படும் இப்போஷாக்கு உணவுப் பொருட்கள் பழுதடைந்தும், துர்நாற்றம் வீசி, சுகாதாரத்துக்குக் கேடு விளைவிக்கும் வகையில் அமைந்துள்ளது என்று என்னிடம் மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

இதற்குப் பதிலளித்து உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம்.மன்சூர், 'சுகாதாரத்துக்கு கேடு விளைவிக்கும் வகையில் வழங்கப்படும் உணவுப் பொருட்கள் தொடர்பில் அதிகாரிகளும், அரசியல் தலைவர்களும் பார்த்துக்கொண்டிருக்க முடியாது.

இப்போஷாக்கு உணவுப் பொருட்களை கொள்வனவு செய்யும் கேள்வி இப்பிரதேசத்தின் பிரதேச வைத்திய அதிகாரியையும் உள்ளீர்க்கின்றது. எனவே, இது தொடர்பில்  உடனடியாக விசாரணை நடத்தி, முறைகேடுகள் இடம்பெற்றிருப்பின், நடவடிக்கை எடுக்கப்பட  வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .