2021 மே 08, சனிக்கிழமை

குறைந்த நிலப்பரப்பில் வேளாண்மை

எம்.எஸ்.எம். ஹனீபா   / 2018 மார்ச் 18 , பி.ப. 05:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை மாவட்டத்தில், எதிர்வரும் சிறு போகத்தில், கடந்த வருடங்களை விட, இம்முறை குறைந்த நிலப்பரப்பிலேயே வேளாண்மை செய்வதற்கான அனுமதி வழங்கப்படுமென, அம்பாறை மாவட்ட விவசாயப் பணிப்பாளர் எம்.எஸ்.ஏ. கலீஸ், இன்று (18) தெரிவித்தார்.

இது குறித்து, அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

அம்பாறை மாவட்டத்தில் ஏற்பட்ட வரட்சி காரணமாக, அம்பாறை டீ.எஸ். சேனநாயக்க சமுத்திரத்தில், 12 சதவீதமான நீர் மட்டம் காணப்படுவதாகவும், தற்போது 96,400 அடி நீர் மாத்திரமே உள்ளதாகவும் தெரிவித்த அவர், இந்நீர் சுமார் 13,310 ஏக்கர் காணிகளில் வேளாண்மை செய்கை மேற்கொள்வதற்கு முடியுமெனவும் குறிப்பிட்டார்.

மேலும், இது தொடர்பான தீர்மானம், அம்பாறை மாவட்ட செயலாளர் துஷித பி. வணிகசிங்க தலைமையில் நடைபெற்ற விவசாய குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் மாவட்ட விவசாயப் பணிப்பாளர்

தெரிவித்தார்.

அத்துடன், மத்திய நீர்ப்பாசனப் பிரிவுக்குட்பட்ட றம்புக்கன் ஓயா, நீத்தை, இலுக்குச்சேனை, பாணாமை, லகுகல, கெல்பிட்டி ஆகிய நீர்ப்பாசன பிரிவுகளில் 1,650 ஏக்கர் நிலப்பரப்பிலும், மாகாண நீர்ப்பாசனப் பிரிவுக்குட்பட்ட சடயந்தலாவ, நாவுக்கல்ல, செம்மணி ஆகிய நீர்ப்பாசப் பிரிவில் 960 ஏக்கர் நிலப்பரப்பிலும் மகாவலி நீர்ப்பாசனப் பிரிவுக்குட்பட்ட தெஹியத்தக் கண்டிய பிரதேசத்தில் 10,700 ஏக்கரிலும் நெற்செய்கை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

எதிர்காலத்துக்கு தேவையான விதை நெல் 1,760 ஏக்கரில் செய்கை பண்ணப்படவுள்ளதாகத் தெரிவித்த மாவட்ட விவசாயப் பணிப்பாளர் எம்.எஸ்.ஏ. கலீஸ்,வேளாண்மை செய்கை மேற்கொள்ள முடியாத பிரதேசங்களில், உப உணவுப் பயிர்ச் செய்கையை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X