Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 ஜனவரி 12 , பி.ப. 02:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
அஸ்லம் எஸ்.மௌலானா, பாறுக் ஷிஹான்
கிழக்கு மாகாண முஸ்லிம்கள் எப்போதும் ஒரே நிலைப்பாட்டில் இருக்க வேண்டுமெனக் கேட்டுக்கொண்ட தேசிய காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாவுல்லா, அதுவே ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்துக்கும் பலமாகுமென்றார்.
சாய்ந்தமருது லீ மெரிடியன் மண்டபத்தில், நேற்று (11) நடைபெற்ற நிகழ்வென்றுக்கு பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே, அவர் இதனைக் கூறினார்.
அங்கு தொடர்ந்துரைத்த அவர், வடக்கு, கிழக்குக்கு வெளியே வாழ்கின்ற முஸ்லிம்கள், இரு வேறான நிலைப்பாட்டில் இருக்கலாம் எனவும் அவர்கள் பிரிந்து நின்றாலும் பிரச்சினையில்லை எனவும் அவர்களுக்கும் கிழக்கிலிருந்து நாம்தான் குரல் கொடுக்க வேண்டுமெனவும் தெரிவித்தார்.
ஆனால், சிங்கள பேரினவாதத்துக்கும் தமிழ் பேரினவாதத்துக்கும் முகங்கொடுக்க வேண்டிய நிலையில், கிழக்கு முஸ்லிம்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை மறந்து விடக்கூடாதெனவும் அவர் தெரிவித்தார்.
“சஜித் வென்றிருந்தால் கிழக்கு மாகாணம் இன்று அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் வந்திருக்கும். ஈரானுக்கு இன்று நடந்திருப்பதைப் பாருங்கள். போலி அரசியலுக்கு பின்னால் இன்னும் இன்னும் முஸ்லிம்கள் இழுத்துச் செல்லப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும்” எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும், “இந்த நாட்டில் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கும் அபிவிருத்திகளுக்கும் தேசிய காங்கிரஸ் பாரிய பங்களிப்பை செய்திருக்கிறது. ஆனால், சில பிரதேசங்கள் எனது அபிவிருத்திகளை வேண்டாம் என்று புறக்கணித்திருந்தன. அதற்கு நான் ஒன்றும் செய்ய முடியாது” எனவும் அவர் தெரிவித்தார்.
5 hours ago
8 hours ago
9 hours ago
19 Sep 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
8 hours ago
9 hours ago
19 Sep 2025