2021 ஏப்ரல் 23, வெள்ளிக்கிழமை

காணாமல் போனவர்களுக்காக ஆர்ப்பாட்டம்

Suganthini Ratnam   / 2016 மார்ச் 30 , மு.ப. 06:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா,கனகராசா சரவணன்

காணாமல் போனவர்களுக்காக நீதி வேண்டுமெனக் கோரி அம்பாறை, அக்கரைப்பற்றுப் பிரதேசத்தில் இன்று புதன்கிழமை அவர்களின் உறவினர்கள் தலையில் கறுப்புப்பட்டிகளை அணிந்து கவனயீர்ப்புப் பேரணியில் ஈடுபட்டனர்.

'காணாமல் போகச் செய்தலை காணாமல் போகச் செய்வோம்', 'ஜெனீவாவின் வாக்குறுதிகளை நிறைவேற்றிக் கொள்வோம்' எனும் தொனிப்;பொருளில் காணாமல் போனோர் குடும்ப ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இந்தக் கவனயீர்ப்புப் பேரணி முன்னெடுக்கப்பட்டது.

ஆலையடிவேம்புப் பிரதேச செயலகத்துக்கு முன்பாக ஒன்றுகூடிய காணாமல் போனவர்களின் உறவினர்கள்;, அங்கிருந்து அக்கரைப்பற்று அதாவுல்லா  அரங்கத்தைச் சென்றடைந்ததுடன், அங்கு பேரணி முடிவுற்றது.     
 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X