2021 ஏப்ரல் 20, செவ்வாய்க்கிழமை

'காணாமல் போனவர்களை விசாரிக்க புலனாய்வாளர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை'

Suganthini Ratnam   / 2016 மார்ச் 31 , மு.ப. 05:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

'காணாமல் போனவர்களை விசாரிப்பதற்கு எந்தப் புலனாய்வாளர்களுக்கும் இந்த அரசாங்கத்;தில் அனுமதி வழங்கப்படவில்லை. இனிவரும் காலங்களில் இவ்வாறான நிலைமை நடப்பதற்கும் நாம் அனுமதிக்க மாட்டோம்' என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.

காணாமல் போனவர்கள் தொடர்பில் புதன்கிழமை (30) மாலை அக்கரைப்பற்றில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், 'இந்த நாட்டில் தீவிரவாதம் மற்றும் அடிப்படைவாதம் உருவாகக்கூடாது. அதெற்கென கடந்த காலங்களில் கடத்தப்பட்டவர்கள், காணாமல் போனவர்கள், கொல்லப்பட்டவர்கள், அநீதி இழைக்கப்பட்டவர்களுக்கு உரிய தீர்வு பெற்றுக்கொடுக்க வேண்டியது காலத்தின் தேவையாகும்.

இராணுவம் மற்றும் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர் இந்நிகழ்வுக்கு வந்தவர்களை வழிமறித்து விசாரணை செய்ததை நாம் அறிகின்றோம். இந்நல்லாட்சியில் இவ்வாறான நிலை ஏற்பட்டதனை நினைத்து வெட்கமடைகின்றேன்.

இந்த அரசாங்கத்தில் உள்ளிருந்து எமது மக்களுக்கான உhயி தீர்வினைப் பெற்றுக் கொடுக்கும் வரையில் தொடர்ச்சியான நாம் நடத்திக் கொண்டிருப்போம் என்பதனை மக்கள் நன்கு புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறான புலனாய்வுச் செயற்பாடு மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தில மட்டுமே நடைபெற்றுள்ளது. மஹிந்த ஆட்சியில் நடைபெற்றதைப் போல் கடத்தல்களோ, கொலைச் சம்பவங்களோ திட்டமிட்டு வேண்டுமென்று நடைபெறவில்லை' என்றார்.
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .