2021 மே 08, சனிக்கிழமை

காணாமல் போன குடும்பஸ்தரின் எலும்புக் கூடு மீட்பு

Niroshini   / 2015 செப்டெம்பர் 27 , மு.ப. 06:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

அம்பாறை, மல்வத்தை, மல்லிகைத்தீவு காட்டுப் பகுதியிலிருந்து நேற்று சனிக்கிழமை காலை எலும்பு கூடொன்று மீட்கப்பட்டுள்ளது.

கடந்த ஓகஸ்ட் மாதம் 28ஆம் திகதி காணாமல்போனதாகக் கூறப்படும் மகாலிங்கம் வேலாயுதம் (வயது 50)என்பவரின் எலும்புக்கூடே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக சம்மாந்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

கிடைக்கப்பபெற்ற தகவலொன்றினையடுத்து ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார் குறித்த எலும்பு கூடை மீட்டுள்ளனர்.

கடந்த ஒரு மாதத்துக்கு முன்னர் வீட்டை விட்டுச் சென்று காணாமல் போயிருந்த மல்வத்தை 1 தம்பிநாயகபுரத்தைச் சேர்ந்த தனது கணவரே என எலும்புக் கூட்டில் அணிந்திருந்த ஆடைகளை வைத்து அவரது மனைவி அடையாளம் காட்டினார்.

பரிசோதனைக்காக எலும்புக் கூடு அம்பாறை பொது வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X