Suganthini Ratnam / 2016 ஜூலை 17 , மு.ப. 07:36 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா
கதிர்காம ஆடிவேல் உற்சவத்தையிட்டு இம்முறை 125,000 பாதயாத்திரிகர்கள் குமண காட்டுப்பாதை ஊடாக கதிர்காமம் சென்றுள்ளனர். இது கடந்த வருடத்தை விட இரு மடங்காக அதிகரித்துள்ளது என அம்பாறை மாவட்ட சிவத்தொண்டர் அமைப்பின் தலைவர் எஸ். திருஞானமூர்த்தி சிவம், இன்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
இம்மாதம் 05ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய கதிர்காம ஆடிவேல் விழா, எதிர்வரும் 21ஆம் திகதி தீர்த்தோற்சவத்துடன் நிறைவடையவுள்ளது. இந்நிலையில், யாத்திரிகர்கள் செல்லும் காட்டுவழிப்பாதை கடந்த 15ஆம் திகதி மூடப்பட்டது.
மேலும், யாத்திரிகர்களுக்குத் தேவையான குடிநீர் விநியோகம் உட்பட மனிதபிமான உதவிகளை அம்பாறை சிவத்தொண்டர் அமைப்பைச் சேர்ந்தவர்கள் மேற்கொண்டு வருவதாகவும் அவர் கூறினார்.
7 hours ago
04 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
04 Nov 2025