2021 ஜனவரி 16, சனிக்கிழமை

கொள்கைப்பிரகடனம் வெளியீடு

Suganthini Ratnam   / 2016 ஜூலை 11 , மு.ப. 05:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பி.எம்.எம்.ஏ.காதர்

தேசிய ஜனநாயக மக்கள் கூட்டமைப்புக் கட்சியின் கொள்கைப்பிரகடனம் நேற்று  ஞாயிற்றுக்கிழமை சம்மாந்துறையில் அமைந்துள்ள கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற செயற்குழுக் கூட்டத்தின்போது வெளியிட்டு வைக்கப்பட்டது.

கட்சியின் தலைவர் கலாநிதி எஸ்.எல்.றியாஸினால் முன்மொழியப்பட்ட இப்பிரகடனம் செயற்குழு உறுப்பினர்களினால் ஏகமனதாக அங்கிகரிக்கப்பட்டது.

பிரகடனம் 01.

இன்று எமது நாட்டில் முஸ்லிம் சமூகத்தினை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற கட்சிகள் நாடாளுமன்ற அதிகாரத்தினையும் அதன் மூலம் கிடைக்கும் நன்மைகளையும் இலக்கு வைத்து செயற்படுவதனால் முஸ்லிம் சமூகம் தேசிய ரீதியில் பலம் குன்றிய சமூகமாக மாறிவருகின்றது. இந்த நிலையில் மக்கள் நலன் பேணும் மாற்றுக்கட்சி ஒன்றினை இந்த மக்களுக்காக ஏற்படுத்துவது இந்த நாட்டு முஸ்லிம் இளைஞர்களின் தலையாய கடமையாகும். இந்த பொறுப்பினை நமது கட்சியான தேசிய ஜனநாயக மக்கள் கூட்டமைப்பு பொறுப்பேற்று செயற்படுத்துதல்.

பிரகடனம் 02.

இலங்கையில் முஸ்லிம் சமூகம் தற்காலத்தில் முகங்கொடுத்து வருகின்ற இனரீதியான ஒடுக்கு முறைகள் தற்போதைய ஆட்சியாளர்களாலும் அவர்களின் பங்காளிகளான முஸ்லிம் கட்சிகளாலும் கண்டுகொள்ளப்படாமல் இருந்த வருகின்றது.

இந்;த நிலைக்கு எதிராக உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் வாழும் முஸ்லிம் சமூக புத்திஜீவிகளை ஒன்று திரட்டி, ஐ.நா.சபையில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் நாடுகளின் துணையுடன் எமது பிரச்சினையை ஐ.நா.சபையில் நேரடியாக முன்வைக்க கூடிய ஒரு பிரதிநிதிகள் சபை ஒன்றினை ஏற்படுத்துதல்.

பிரகடனம் 03.

எதிர்காலத்தில் ஜெனீவாவில் இடம்பெறும் மனித உரிமை கூட்டத்தொடர்களில் எமது கட்சிப் பிரதிநிதிகளையும் பங்குபற்றச் செய்தல்.

பிரகடனம் 04.

எமது கட்சியின் இலக்குகளை முன்னெடுக்கும் வண்ணம் இந்த நாட்டில் சட்டபூர்வமாக இயங்கும் கட்சிகளோடு ஒரு கூட்டமைப்பினை ஏற்படுத்துதல்.

பிரகடனம் 05.

இந்த நாட்டில் வாழுகின்ற சிறுபான்மை மக்களையும் இந்த நாட்டின் பிரஜைகளாக மதித்து ஆட்சி நடத்தக்கூடிய எந்தவொரு ஆட்சியாளரையும் இதுவரை இந்த நாடு கொண்டிருக்கவில்லை என்பதை எமது கட்சி வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றது.

தற்போதைய அரசு விடயத்திலும் எமது  கட்சி இதே நிலைப்பாட்டையே கொண்டிருக்கின்றது. உண்மையில் தற்போதைய அரசு சிறுபான்மை மக்களின் நலன் பேணும் அரசாக இருக்கின்றது என்றால், அதன் அடையாளமாக 'குரோதப்பேச்சு' க்களுக்கு எதிரான சட்டத்தினை ஏற்படுத்த வேண்டும்.

போன்ற பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டன.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .