2020 நவம்பர் 26, வியாழக்கிழமை

கிழக்கு மாகாண வரவு –செலவுத்திட்டம்

Suganthini Ratnam   / 2016 டிசெம்பர் 18 , மு.ப. 09:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

கிழக்கு மாகாணசபையின் வரவு -செலவுத்திட்டம்  செவ்வாய்க்கிழமை சமர்ப்பிக்கப்பட்டு, 04 நாட்களுக்கு விவாதம் நடைபெறவுள்ளதாக அம்மாகாணப் பேரவைச் செயலகம், நேற்று (18) தெரிவித்தது.

முதலாம் நாள் -சபைத் தவிசாளர் சந்திரதாச கலப்பதியின் அறிவித்தலை அடுத்து, மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட்டினால் குறைநிரப்பு மதிப்பீடு சமர்ப்பிக்கப்பட்டு, 2017ஆம் ஆண்டுக்கான வரவு –செலவுத்திட்ட அறிக்கை வாசிக்கப்படும். இதனை அடுத்து, குழுநிலை விவாதம், முதலமைச்சுக்கான விவாதம்  இடம்பெறுவதுடன், வாக்கெடுப்பும் நடைபெறும்.

இரண்டாம் நாள் -விவசாய அமைச்சின் கீழுள்ள விவசாயம் மற்றும் நீர்ப்பாசனம், கால்நடை உற்பத்தி, கூட்டுறவு அபிவிருத்தி ஆகிய திணைக்களங்களுக்கான குழுநிலை விவாதமும் வாக்கெடுப்பும் நடைபெறவுள்ளன.

மூன்றாம் நாள் -கல்வி அமைச்சின் கீழுள்ள கல்வி, தகவல் தொழில்நுட்பம் மற்றும் முன்பள்ளிக் கல்வி, விளையாட்டு, பண்பாட்டலுவல்கள், இளைஞர் விவகாரம், புனர்வாழ்வு மற்றும் மீள்;குடியேற்றம் தொடர்பான குழுநிலை விவாதமும் வாக்கெடுப்பும் நடைபெறவுள்ளன.

அன்றையதினம் நண்பகல் 12 மணி முதல் சுகாதார அமைச்சுக்கான குழுநிலை விவாதமும் வாக்கெடுப்பும் நடைபெறவுள்ளன. சுகாதார, சுதேச வைத்திய, நன்நடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு, சமூக நலன்புரிச் சேவைகள், கிராமிய மின்சார அமைச்சு தொடர்பில் இவ்விவாதம் நடைபெறும்.

நான்காம் நாள்- வீதி அபிவிருத்தி, காணி அபிவிருத்தித்திறன் மற்றும் மனிதவலு அபிவிருத்தி, மகளிர் விவகாரம், நீர்வழங்கல்; அமைச்சின் வீதி அபிவிருத்தித் திணைக்களம், காணி நிர்வாகத் திணைக்களம் ஆகியவற்றின் குழுநிலை விவாதமும் வாக்கெடுப்பும் நடைபெறவுள்ளன.

இதன் பின்னர் மாகாணசபையின் தொகுப்பு உரையும் முதலமைச்சரின் தொகுப்பு உரையும் நடைபெறும். இறுதியில் வரவு -செலவுத்திட்ட விவாதம் தொடர்பான வாக்கெடுப்பு நடைபெறவுள்ளதாக அப்பேரவை கூறியது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .