Suganthini Ratnam / 2016 மார்ச் 11 , மு.ப. 11:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
-கனகராசா சரவணன்
அம்பாறை, ஆலையடிவேம்புப் பிரதேசத்திலுள்ள குறுக்கு வீதியில் பிரத்தியேக வகுப்புக்கு இன்று வெள்ளிக்கிழமை காலை சைக்கிளில்; சென்ற மாணவி ஒருவரின் கழுத்தில் இருந்த தங்கச்சங்கிலியை அறுக்க முற்பட்டதாகக் கூறப்படும் மோட்டார் சைக்கிளில் வந்த 28 வயதுடைய ஒருவரை கைதுசெய்துள்ளதுடன், மோட்டார் சைக்கிளையும் கைப்பற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இம்மாணவியின் தங்கச் சங்கிலியை அறுக்க முற்பட்டபோது, அம்மாணவி சங்கிலியை கையால் பிடித்தவாறு கீழே விழுந்துள்ளதுடன், சத்தமிட்டுள்ளார்.
இந்தச் சத்தத்தைக் கேட்டு அயலவர்கள் ஓடிவந்து சந்தேக நபரை பிடிக்க முற்பட்டனர். இருப்பினும், சந்தேக நபர் தப்பியோடியுள்ளார். இதன்போது மோட்டார்; சைக்கிளின் இலக்கத்தகட்டு இலக்கத்தை பொதுமக்கள் குறித்துக்கொண்டு, பொலிஸாரிடம் இது தொடர்பில் முறைப்பாடு செய்து அவ்விலக்கத்தையும் வழங்கியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்தே சந்தேக நபரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
14 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
2 hours ago
2 hours ago