Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2021 ஏப்ரல் 16, வெள்ளிக்கிழமை
Editorial / 2020 மார்ச் 04 , பி.ப. 05:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
றாசிக் நபாயிஸ்
சமுர்த்தி பெறும் பயனாளிகளின் பிள்ளைகளில் 2018ஆம் ஆண்டு க.பொ.த. சாதாரணதரம் சித்தியடைந்த மாணவர்களுக்கு “சமுர்த்தி சிப்தொர கல்விப் புலமைப் பரிசில்” திட்டத்தின் ஊடாக நற்சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்வு, கல்முனை பிரதேச செயலக சமுர்த்தி சமூக அபிவிருத்திப் பிரிவின் ஏற்பாட்டில், மருதமுனை, நற்பிட்டிமுனை சமுர்த்தி வங்கியின் முகாமையாளர் சட்டத்தரணி எம்.எம்.எம்.மூபின் தலைமையில், மருதமுனை கலாசார மண்டபத்தில் நேற்று (03) நடைபெற்றது.
இதன்போது, மருதமுனை, நற்பிட்டிமுனை சமுர்த்தி பெறும் பயனாளிகளின் பிள்ளைகளுக்கு க.பொ.த உயர்தரம் கற்பதற்கு மாதாந்தம் 1,500 ரூபாய் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் மூலம் 271 மாணவர்களுக்கு சிப்தொர புலமைப்பரிசில் நற்சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
நிகழ்வின் பிரதம அதிதியாக அம்பாறை மாவட்டச் செயலக சமூர்த்தி திணைக்களப் பணிப்பாளர் எம்.எஸ்.எம்.சப்றாஸ், கௌரவ அதிதியாக கல்முனை பிரதேச செயலாளர் எம்.எம்.நசீர், விசேட அதிதிகளாக மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரியின் அதிபர் ஏ.எல்.சக்காப், மருதமுனை அல்-ஹம்றா வித்தியாலைய அதிபர் ஜ.உபைதுல்லாஹ், பெரியநீலாவணை புலவர் மணி சரிபுத்தீன் மகா வித்தியாலைய அதிபர் எம்.ஜ.எம்.நியாஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago