2020 நவம்பர் 26, வியாழக்கிழமை

'சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களின் தேவைகள் பூர்த்தி செய்யப்படவில்லை'

Suganthini Ratnam   / 2016 டிசெம்பர் 26 , மு.ப. 05:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கார்த்திகேசு

சுனாமி அனர்த்தம் இடம்பெற்று  12 வருடங்களான போதிலும், அம்பாறையில்; பாதிக்கப்பட்ட மக்களுக்கான தேவைகள் இதுவரையில் அரசாங்கத்தால் பூர்த்தி செய்து கொடுப்படவில்லை எனத் தமிழ்த்; தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார்.

திருக்கோவில் சுப்பர் ஸ்டார் விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் சுனாமி நினைவேந்தல் நிகழ்வு, திருக்கோவில் சுப்பர் ஸ்டார் விளையாட்டுத் திடலில் இன்று (26) நடைபெற்றது.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றியபோது, 'அம்பாறையில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்கள்   வீட்டு வசதியின்றி தற்காலிகக் கொட்டில்களில் கஷ்டத்துக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றனர்.

எனவே, சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளைக் கருத்திற்கொண்டு இந்த வருடத்துக்குள்ளாவது விசேட திட்டங்கள் மூலம் அவர்களுக்கான வீடுகளை  நிர்மாணித்துக் கொடுப்பதற்கு இந்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக வழங்கப்பட்ட வீடுகளுக்குரிய  காணி உறுதிப்பத்திரங்களை  வழங்குவதற்கும்  நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

இழப்பை எதிர்நோக்கியுள்ள மக்கள் தொடர்ந்தும் அந்த வடுக்களுடன் வாழ்வதற்கான சந்தர்ப்பத்தை நாம் ஏற்படுத்திக் கொடுக்காது, அப்பாதிப்பிலிருந்து  மீண்டு மகிழ்ச்சியாக வாழ்வதற்கான சூழ்நிலையை நாம் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று இந்த அரசாங்கத்தைக் கேட்டுக்கொள்கின்றோம்' என்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--