2021 ஜனவரி 23, சனிக்கிழமை

சாய்ந்தமருது ஆயுர்வேத மருந்தகம் தரம் உயர்வு

Suganthini Ratnam   / 2016 ஜூலை 15 , மு.ப. 06:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பைஷல் இஸ்மாயில்

அம்பாறை, கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் காரியாலயத்தின் கீழ் உள்ள சாய்ந்தமருது ஆயுர்வேத மருந்தகம்  மாவட்ட வைத்தியசாலையாக தரம் உயர்த்தப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏல்.எல்.எம்.நஸீர், இன்று வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

கிழக்கு மாகாண அமைச்சரவை கூட்டம் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது. இதன்போது சாய்ந்தமருது ஆயுர்;வேத மத்திய மருந்தகத்தை மாவட்ட வைத்தியசாலையாக தரம் உயர்த்த வேண்டும் என்ற அமைச்சரவை பத்திரத்தை அமைச்சரவையில் சமர்ப்பித்து உரையாற்றியதாகவும் இதன் பின்னர், குறித்த மருந்தகத்தை மாவட்ட வைத்தியசாலையாக தரம் உயர்த்துவதற்கு  அமைச்சரவையில் அனுமதி கிடைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .