2021 மே 18, செவ்வாய்க்கிழமை

சாய்ந்தமருதுக்கான உள்ளூராட்சி சபை அமைப்பதற்கு பரிந்துரை

Niroshini   / 2016 ஜூலை 23 , மு.ப. 03:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பி.எம்.எம்.ஏ.காதர், அஸ்லம் எஸ் மௌலானா,எம்.எஸ்.எம். ஹனீபா

சாய்ந்தமருதுக்கு உள்ளூராட்சி சபை அமைப்பதற்கு உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபா, அமைச்சின் உபகுழுவின் தலைவருக்குப் பரிந்துரை செய்துள்ளதாக அரச வர்த்தகக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஏ.எம்.ஜெமீல் தெரிவித்தார்.

சாய்ந்தமருதுக்கான உள்ளூராட்சி சபை ஒன்றை அமைப்பது தொடர்பிலான  கலந்துரையாடல் நேற்று(22) வர்த்தக கைத்தொழில் அமைச்சில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தலைமையில் நடைபெற்ற போதே உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபா இந்தப்பரிந்துரையைச் செய்ததாக ஏ.எம்.ஜெமீல் தெரிவித்தார்.

இதன்போது, அமைச்சர் பைஸர் முஸ்தபா, எந்தத் தடைகள் வந்தாலும் அதை முறியடித்து சாய்ந்தமருதுக்கு உள்ளூராட்சி சபை ஒன்றை அமைப்பதற்கு துரித நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் அமைச்சர் ரிஷாட் பதியுதீனிடம் உறுதியளித்தார்.

இதேவேளை, சாய்ந்தமருது மறுமலர்ச்சி மன்றத்தின் செயலாளர் கலீல் எஸ். மொஹமட், உள்ளூராட்சி சபை அமைப்பது தொடர்பில் விளக்கமளித்து அது தொடர்பான ஆவணங்களையும் அமைச்சர் பைஸர் முஸ்தபாவிடம் கையளித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .