Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை
Kogilavani / 2016 ஜூலை 29 , மு.ப. 08:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
பைஷல் இஸ்மாயில்
'கட்டடம் திறந்து வைப்பதாலும், வைத்திய உபகரணங்கள் வழங்குவதாலும் வைத்திய சேவை வளர்ச்சிடைந்ததாக கருத முடியாது. அதற்காக வைத்தியர்கள், வைத்தியசாலையில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் அனைவரும் ஒன்றிணைந்து பொதுமக்கள் சிறந்த சேவை செய்வதன் மூலமே சுகாதாரத்துறையை வளர்சியடைய வைக்க முடியும்' என்று கிழக்கு மாகாண சுகாதார, சுதேச வைத்தியத்துறை, சிறுவர் நன்னடத்தை பாராமரிப்பு, சமூக சேவைகள் மற்றும் கிராமிய மின்சார அமைச்சர் ஏல்.எல். முஹம்மட் நசீர் தெரிவித்தார்.
அக்கரைப்பற்று மாவட்ட வைத்தியசாலையின் பற்சிச்சைக் கூடத்துடன் வைத்திய உபகரணங்கள் வழங்கும் நிகழ்வும் நோயாளர் விடுதித் தொகுதி திறப்பும், நேற்;று (28) இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்;
'அக்காரைப்பற்று பிரதேசத்தில் இந்த வைத்தியசாலை பலம்பெறும் வைத்தியசாலையாகவும், மக்களுக்கு சிறந்து சேவையை வழங்கிவரும் வைத்தியசாலையாக காணப்படுகின்றது.
இந்த வைத்தியசாலைக்கான பிரச்சினைகள் தொடந்தேர்ச்சியாக காணப்பட்டமை எனது கவனத்துக்கு கொண்டுவரப்பட்டதன் பின்னர், இதன் குறைபாடுகளை நிவர்த்தி செய்து கொடுத்த வேண்டும் என்பதற்காக எனது நிதியிலிருந்து முதற்கட்ட நடவடிக்கையாக பல் வைத்திய உபகரணங்களுக்காக 12 இலட்சமும், நோயாளர் விடுத்தித் தொகுதிக்காக 5 மில்லியனையும் ஒதுக்கீடு செய்துள்ளேன்.
கிழக்கு மாகாண மக்களுக்கு சிறந்த சுகாதார சேவையை வழங்குவதில் எமது நாட்டின் ஜனாதிபதியும் அதிக கவனம் செலுத்தி வருகின்றார். அதற்காக இம்முறை 1,000 மில்லியன் ரூபாய் கிழக்கு மாகாணத்துக்காக ஒதுக்கப்பட்டுள்ளது' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
38 minute ago
46 minute ago
56 minute ago