2020 நவம்பர் 30, திங்கட்கிழமை

சிறுவன் மீது துஷ்பிரயோக முயற்சி: சிற்றூழியர் தலைமறைவு

Princiya Dixci   / 2016 மார்ச் 02 , மு.ப. 09:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

- கனகராசா சரவணன்

அக்கரைப்பற்று வைத்தியசாலை விடுதியொன்றி தங்கியிருந்து சிகிச்சை பெற்று வந்த 13 வயதுச் சிறுவனை அங்கு பணியாற்றும் சிற்றூழியர், துஷ்பிரயோகத்துக்குட்படுத்த முயற்சித்துள்ள சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவத்துடன் தொடர்படைய சிற்றூழியர் பாலமுனையைச்  சேர்ந்தவர் எனவும் அவர் தற்போது தலைமறைவாகியுள்ளதாகவும் அக்கரைப்பற்றுப் பொலிஸார் தெரிவித்தனர். 

அட்டாளைச்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த சிறுவன், காய்ச்சல் காரணமாக கடந்த திங்கட்கிழமை (29) வைத்தியாலை விடுதியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளான்.

இந்நிலையில், திங்கட்கிழமை இரவு குறித்த விடுதியில் பணியாற்றி வந்த சிற்றூழியர், ஆசை வார்த்தை காட்டி வைத்தியசாலையிலுள்ள 3ஆம் மாடிக்கு அச்சிறுவனை அழைத்துச் சென்று துஷ்பிரயோகத்துக்குட்படுத்த முயற்சித்துள்ளார்.

இதையடுத்து, அங்கிருந்து தப்பியோடிவந்த சிறுவன், சம்பவம் தொடர்பில் பெற்றோரிடம் தெரிவித்துள்ளான். 

இது தொடர்பில், அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் சிறுவனின் பெற்றோர் முறைப்பாடு செய்ததையடுத்து சிற்றூழியரை கைதுசெய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--