2021 ஜனவரி 26, செவ்வாய்க்கிழமை

தங்கவேலாயுதபுரத்தில் அதிகரித்து வரும் யானைகளின் தொல்லை

Sudharshini   / 2016 ஜூலை 13 , பி.ப. 12:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கார்த்திகேசு

அம்பாறை, திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தங்கவேலாயுதபுரம் மீள்குடியேற்ற கிராமத்துக்குள் நேற்று செவ்வாய்க்கிழமை (12)  இரவு 12 மணியளவில் நுழைந்த காட்டு யானைகள், வீடொன்றை உடைத்து குறித்த வீட்டுக்குள் இருந்த அரிசி மற்றும் உணவுப் பொருட்களை நாசம் செய்துள்ளன.

தங்கவேலாயுதபுரம் மலையடிப்பிள்ளையார் ஆலயத்துக்கு அருகில் இருந்த வீடொன்றில் உணவுக்காக வைத்திருந்த 20கிலோ அரிசி, தவுடு போன்றவற்றை உண்டதுடன் வீட்டில் சமையல் பாத்திரங்களையும் சேதமாக்கியுள்ளன.

இதேவேளை, மற்றொரு நபரின் காணிக்குள் இருந்த வாழை மரங்களையும் சேதப்படுத்தியுள்ளன. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட வீட்டின் உரிமையாளர் இன்று புதன்கிழமை (13)  சேதம் தொடர்பான முறைப்பாடு ஒன்றினை கிராம சேவகர் மற்றும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகியோர் ஊடாக பிரதேச செயலாளருக்கு அறிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .