2021 ஜனவரி 23, சனிக்கிழமை

’துணிச்சலுள்ள உங்களுக்கு நாட்டை வழங்கியமை மகிழ்ச்சி’

எம்.எஸ்.எம். ஹனீபா   / 2019 நவம்பர் 22 , பி.ப. 06:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

“தூர நோக்கும் துணிச்சலுமுள்ள உங்களிடம், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவியை தாய் திருநாடு கையளித்து இருப்பதில் பெருமகிழ்ச்சி அடைகின்றோம்” என்று, ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்‌ஷவுக்கு, அக்கரைப்பற்று வர்த்தகர்கள் சங்கம் அனுப்பி வைத்துள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக்கரைப்பற்று பக்தர்கள் சங்கத்தின் தலைவர் எம்.எம்.எம். லியாக்கத் அலியால், நேற்று (21) இந்த வாழ்த்துச் செய்தி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அந்தச் செய்தியில்,

இன மத மொழி பெரும்பான்மை சிறுபான்மை என்பவைகள் எல்லாம் கடந்து இந்த நாட்டிலேயே சகல இன மக்களும் அவரவர் உரிமையோடும் சுதந்திரத்தோடும் வாழக்கூடிய சட்டரீதியான ஒரு ஏற்பாட்டை செய்து கொள்ள ஆளுமைமிக்க உங்களால் முடியும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிறந்த நாடொன்றை கட்டியெழுப்பி சகலரும் ஒரே குடையின் கீழ் வாழ்வதற்கு மக்கள் பெரும் நம்பிக்கையோடு எதிர்பார்க்கின்றனர் என மேலும் அவ் வாழ்த்துச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .