Editorial / 2019 நவம்பர் 28 , பி.ப. 02:52 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஏ.எல்.நிப்றாஸ்
இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபையின் கீழ், அம்பாறை மாவட்டத்தில் இயங்கும் தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சிநெறிகளை தொடர்வதற்காக இளைஞர், யுவதிகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
மாவட்டத்தில் தமிழ் மொழிமூலத்தில் இயங்கும் 7 தொழிற்பயிற்சி நிலையங்களில் நடத்தப்படவுள்ள கற்கைநெறிகளுக்கு டிசெம்பர் 23ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்க முடியுமென, நிந்தவூர், மாவட்ட அலுவலகம் அறிவித்துள்ளது.
நிந்தவூர் மாவட்ட தொழிற்பயிற்சி நிலையம், சம்மாந்துறை, அக்கரைப்பற்று, சாய்ந்தமருது, மத்தியமுகாம், பொத்துவில், காரைதீவு ஆகிய பிரதேசங்களில் அமைந்துள்ள தொழிற் பயிற்சி நிலையங்களில் 6 மாத, ஒரு வருட காலத்தைக் கொண்ட பயிற்சிநெறிகள் ஜனவரி மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளன. இதுதவிர பகுதிநேரப் பாடநெறிகளையும் தொடர முடியும்.
இதற்கமைய, தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பவியலாளர் (என்.வி.கியு. மட்டம் 5, 4), மின்னியலாளர், வாகன திருத்துநர், இலத்திரனியல் பிரயோக தொழில்நுட்பவியலாளர், குளிரூட்டி, வாயுச்சீராக்கி திருத்துநர், உதவி கணிய அளவையியலாளர், கணினி வன்பொருள் தொழில்நுடபவியலாளர், உணவு பரிமாறுபவர், தையல், கணினி படவரைஞர், நீர்க்குழாய் பொருத்துநர், மோட்டார் சைக்கிள் திருத்துநர், அதிவேக தையல் இயந்திர இயக்குநர், அலுமீனியம் பொருத்துநர், ஆடைத் தொழிற்சாலை தரக்கட்டுப்பாட்டாளர், மேசன், செயலாண்மைப் பயிற்சி, எலக்ட்ரிக் மோட்டர் வைண்டர், பேக்கர், விடுதி அலங்கரிப்பாளர், உருக்கி ஒட்டுநர், மரக் கைவினைஞர் உள்ளிட்ட மேலும் பல முழு நேரப் பயிற்சி நெறிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
க.பொ.த. சாதரண தர தகுதியையுடையோர் மட்டுமன்றி, தரம் 9 தகமைகளையுடைய இளைஞர், யுவதிகளும் பல்வேறு கற்கைநெறிகளை தொடரலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேற்படி பயிற்சிநெறிகளைத் தொடர விரும்புவோர் தமது விண்ணப்பங்களை, பிரதிப் பணிப்பாளர், மாவட்டக் காரியாலயம், மாவட்டத் தொழிற்பயிற்சி நிலையம், பிரதான வீதி, நிந்தவூர் என்ற முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
13 Dec 2025
13 Dec 2025
13 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 Dec 2025
13 Dec 2025
13 Dec 2025