Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 09, புதன்கிழமை
Princiya Dixci / 2016 ஜூலை 17 , மு.ப. 10:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சபேசன்
தாந்தாமலை முருகன் ஆலயத்துக்கான பாதயாத்திரை, நாளை திங்கட்கிழமை (18) ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது. இந்த பாதையாத்திரையானது, கிழக்கு மாகாணசபையின் உறுப்பினர் மா.நடராசா தலைமையில் நடைபெறவுள்ளது.
கடந்த ஐந்து வருடங்களாக நடைபெற்றுவரும் இந்த யாத்திரையானது, இம்முறை கோட்டைக்கல்லாறு, அம்பாறை வில் பிள்ளையார் ஆலயத்திலிருந்து திங்கட்கிழமை (18), அதிகாலை 5 மணியளவில் ஆரம்பமாக உள்ளது.
இவ்யாத்திரை ஒந்தாச்சிமடம், களுவாஞ்சிக்குடி, பட்டிருப்பு, பெரியபோரதீவு, முனைத்தீவு, புன்னைக்குளம், தும்பங்பேணி,ஊத்துச்சேனை ஊடாக வாழைக்காலை செல்லக்கதிர்காமம் செல்வதுடன், அங்கு ஒருநாள் தங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. மறுநாள் காலை செவ்வாய்கிழமை (19) அங்கிருந்து முருகன் ஆலயத்தைச் சென்றடைய தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்தப் பாதயாத்திரையின் போது சகல வசதிவாய்ப்புக்களும் ஒழுங்குபடுத்தி கொடுக்கவுள்ளதாக இந்நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago