2021 மே 10, திங்கட்கிழமை

தொற்றா நோய் தொடர்பான விழிப்புணர்வும் பரிசோதனையும்

Princiya Dixci   / 2015 செப்டெம்பர் 28 , மு.ப. 05:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா
 
அக்கரைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களில் தொற்றா நோய் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கும் இலவச பரிசோதனை முகாமும் அக்கரைப்பற்று அல்-பத்தாஹ் சமூகசேவைக் காரியலத்தில் திங்கட்கிழமை (28) நடைபெற்றது.
 
அக்கரைப்பற்று அல்-பத்தாஹ் சமூகசேவை அமைப்பின் ஏற்பாட்டில் அதன் தலைவர் லியாகத் அலிகான் தலைமையில் இந்நிகழ்வுகள் இடம்பெற்றன.
 
மக்கள் அதிகமாகப் பாதிக்கப்பட்டு வரும் தொற்றா நோய்களான நீரிழிவு நோய், இரத்த அழுத்தம், கொலஸ்ரோல், உடல் நிறை போன்றன தொடர்பில் பரிசோதிக்கப்பட்டதுடன், அதிலிருந்து நிவாரணம் பெறுவதற்கான ஆலோசனைகளும் வைத்திய அதிகாரிகளினால் வழங்கப்பட்டன.
 
அக்கரைப்பற்று பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி எம்.ஏ.பாஸிலாவின் வழிகாட்டலில் சிரேஷ்ட பொதுச்சுகாதார பரிசோதகர் ஆர்.றசிந்திரமூர்தி மற்றும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களான ஏ.எச்.பௌமி, ஏ.பி.சம்சுதீன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X