2021 மே 16, ஞாயிற்றுக்கிழமை

நேர்முகப்பரீட்சை

Suganthini Ratnam   / 2016 ஓகஸ்ட் 03 , மு.ப. 05:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

வாழ்வின் எழுச்சி அபிவிருத்தித் திணைக்களத்தின் சமூகப் பாதுகாப்பு நிதியத்தினூடாக சிப்தொற புலமைப்பரிசில் கொடுப்பனவுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான நேர்முகப்பரீட்சை அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் நாளை வியாழக்கிழமை காலை 09 மணி முதல் நடைபெறவுள்ளது.  

அட்டாளைச்சேனைப் பிரதேசத்திலுள்ள  பாடசாலைகளின் மாணவர்களுக்கான நேர்முகப்பரீட்சை நடைபெறவுள்ளதாக, திவிநெகும திணைக்களத்தின் அட்டாளைச்சேனைப் பிரதேச செயலகத்தின் தலைமைப்பீட முகாமையாளர் ஏ.சீ.அன்வர் தெரிவித்தார்.

அட்டாளைச்சேனை, பாலமுனை, ஒலுவில், தீகவாபி, திராய்க்கேணி ஆகிய பிரதேசங்களில் 2014ஆம், 2015ஆம் ஆண்டுகளில் கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சையில் தோற்றிய 44 மாணவர்கள் இப்புலமைப்பரிசிலுக்கு  தெரிவுசெய்யப்படவுள்ளனர். இவ்வாறு தெரிவுசெய்யப்படும் மாணவர்களுக்கு மாதாந்தம் 1,500 ரூபாய் படி 02 வருடங்களுக்கு கொடுப்பனவு வழங்கப்படுமென திவிநெகும திணைக்களத்தின் அட்டாளைச்சேனைப் பிரதேச செயலகத்தின் தலைமைப்பீட முகாமையாளர் ஏ.சீ.அன்வர் தெரிவித்தார்.

புலமைப்பரிசிலுக்கு தெரிவுசெய்யப்படவுள்ள மாணவர்கள் குடும்ப வாழ்வின் எழுச்சி சமூக பாதுகாப்பு நிதியத்தில் அங்கத்துவம் பெற்றிருப்பதோடு, கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சையில் கணிதம், தமிழ் உட்பட ஆகக்கூடிய பெறுபேற்றினை பெற்றிருப்பதுடன் உரிய பிரதேச செயலகத்தில் நிரந்தரமாக வசிப்பவராகவும் இருத்தல் வேண்டும்.
தாய், தந்தையை இழந்தவர்களும் வலது குறைந்தோரும் விசேட கவனத்தில் கொள்ளப்படுவர்.
இதற்கான விண்ணப்பம் அந்தந்த பகுதி திவிநெகும அபிவிருத்தி உத்தியோகத்தர் ஊடாக கோரப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .