2021 மே 18, செவ்வாய்க்கிழமை

பசுக்களை கடத்திய வானுக்கு துப்பாக்கிச்சூடு; இருவர் கைது

Suganthini Ratnam   / 2016 ஜூலை 31 , மு.ப. 08:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

 -எஸ்.கார்த்திகேசு                                                                                                     

அம்பாறை, தாண்டியடிக் கிராமத்திலிருந்து 03 பசுக்களை கடத்திச் சென்ற குற்றச்சாட்டின் பேரில் 02 பேரை இரத்தினபுரியில் இன்று ஞாயிற்றுக்கிழமை கைதுசெய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த 26ஆம் திகதி, தாண்டியடிக் கிராமத்திலிருந்து 03 பசுக்களை  கடத்திக்கொண்டு சாகாமம் காட்டுப்பாதையூடாக சென்ற வானை நிறுத்துமாறு  விசேட அதிரடிப்படையினர் சமிக்ஞை காட்டியுள்ளனர். இருப்பினும், அச்சமிக்ஞையை மீறிச் சென்ற அவ்வான் மீது விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டை அடுத்து குறித்த வான் தாலிபோட்ட ஆற்றினுள் விழுந்ததுடன், அப்பசுக்களை கடத்தியோரும் தப்பிச்சென்றிருந்தனர். இந்நிலையில், குறித்த பசுக்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டன.  

இது தொடர்பில் விசாரணை மேற்கொண்டுவந்த நிலையில் இச்சந்தேக நபர்களைக் கைதுசெய்ததுடன், இச்சம்பவத்துடன் தொடர்புடைய ஏனையோரைத் தேடிவருவதாகவும் பொலிஸார் கூறினர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .