2020 நவம்பர் 24, செவ்வாய்க்கிழமை

பஸ் சேவையை நீடிக்கக் கோரிக்கை

எம்.எஸ்.எம். ஹனீபா   / 2020 ஜனவரி 20 , பி.ப. 02:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு ரயில்  நிலையத்திலிருந்து பொத்துவிலுக்கான இலங்கை போக்குவரத்துச் சபையின் ரயில் இணைப்பு பஸ் சேவையை ஆரம்பிக்குமாறு பிரயாணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீரவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

காலை 06.05 மணிக்கு கொழும்பு, கோட்டையிலிருந்து மட்டக்களப்பு ரயில் நிலையத்துக்குப் பிற்பகல் 02.45க்கு வரும் உதயதேவி ரயிலுக்கு, மட்டக்களப்பு ரயில் நிலையத்திலிருந்து கல்முனை ஊடாக அக்கரைப்பற்று செல்வதற்கு இலங்கை போக்குவரத்துச் சபையால் பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

இந்த பஸ் சேவை ஊடாக, கொழும்பு உட்பட தூர இடங்களிலிருந்து வரும் பிரயாணிகளும், அரசாங்க உத்தியோகத்தர்களும் கல்முனை, நிந்தவூர், சம்மாந்துறை, ஒலுவில், பாலமுனை, அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று ஆகிய இடங்களுக்குச் செல்கின்றனர்.

எனினும், பஸ் சேவை அக்கரைப்பற்று நகருடன் நிறுத்தப்படுவதால் பொத்துவில், திருக்கோவில், பாணாமை ஆகிய இடங்களுக்குச் செல்லும் பிரயாணிகள் பல்வேறு அசௌகரீங்கங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

அத்துடன், கொழும்பு, கோட்டை ரயில் நிலையத்திலிருந்து மாலை 07.15க்கு புறப்படும் ரயில், மட்டக்களப்பு ரயில் நிலையத்திலிருந்து அதிகாலை 03.55 மணிக்கு வரும் பாடுமீன் கடுகதி ரயிலில் வரும் பிரயாணிகளின் வசதி கருதி பொத்துவில்  நகருக்கு இந்த பஸ் சேவையை நீடிக்குமாறும், சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--