எம்.எஸ்.எம். ஹனீபா / 2019 நவம்பர் 26 , பி.ப. 05:20 - 0 - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை, கல்முனை மத்திய பஸ்தரிப்பு நிலையத்தை புனரமைப்புச் செய்யுமாறு, பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அம்பாறை மாவட்டத்தில் முக்கிய வர்த்தக கேந்திர நிலையமாகக் காணப்படுகின்ற கல்முனை மாநகரத்தில் அமைந்துள்ள இந்த பஸ் தரிப்பு நிலையம், நீண்ட காலமாக புனரமைப்புச் செய்யப்படாமல், கவனிப்பார் அற்ற நிலையில் காணப்படுவதால் பயணிகளும் வாகன சாரதிகளும் பல்வேறு அசௌகரீகங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
பஸ் தரிப்பு நிலையம் குன்றும் குழியுமாகக் காணப்படுவதால் மழை காலங்களில் பல்வேறு அசௌகரீகங்களை எதிர்கொள்வதாக, பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
பஸ் தரிப்பு நிலையக் கட்டடமும் மோசமான நிலையில் காணப்படுவதோடு, அப்பிரதேசங்களில் துர்நாற்றம் வீசுவதாகவும், பயணிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
கல்முனை பஸ்தரிப்பு நிலையத்திலிருந்து கொழும்பு, யாழ்ப்பாணம், புத்தளம், மன்னார், குருநாகல், கட்டுநாயக்க விமான நிலையம் ஆகிய இடங்களுக்கு நாளாந்தம் பஸ் சேவைகள் இடம்பெறுகின்றன.
நீண்ட தூரம் பிரயாணம் செய்யவரும் பயணிகள் தங்குவதற்கும், குறிப்பாக அமர்ந்து கொள்வதற்கான வசதிகளும் இல்லையென தெரிவிக்கப்படுகின்றது.
எனவே, இந்த பஸ் தரிப்பு நிலையத்தை சகல வசதிகளுடன் கூடிய பஸ் தரிப்பு நிலையமாக புனரமைத்துத் தருமாறு, பயணிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.
2 minute ago
6 minute ago
14 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 minute ago
6 minute ago
14 minute ago