2021 ஏப்ரல் 23, வெள்ளிக்கிழமை

மணல் கடத்தல் முறியடிப்பு

Editorial   / 2020 மார்ச் 04 , பி.ப. 05:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாறுக் ஷிஹான்

சட்டவிரோதமாக உரப்பைகள் மூலம் கடல் மணல் கடத்திய மோட்டார் சைக்கிள் ஒன்றை, கரையோரம் பேணல் மற்றும் கரையோர மூலவளங்கள் முகாமைத் திணைக்கள உத்தியோகத்தர்கள் கைப்பற்றியுள்ளனர்.

அம்பாறை - சாய்ந்தமருது முதல் நிந்தவூர் வரையான கடற்கரையோரங்களில் சட்டவிரோதமாக அண்மைக்காலமாக மணல் கடத்தல் இடம்பெற்று வருவதாகக் கிடைக்கப்பெற்ற தகவல்களையடுத்து, நேற்று (03) இரவு கரையோரம் பேணல், கரையோர மூலவளங்கள் முகாமைத் திணைக்கள உத்தியோகத்தர் குழு சுற்றிவளைப்புகளை மேற்கொண்டிருந்தனர்.

இதன்போது, மோட்டார் சைக்கிள் மூலம் சட்டவிரோதமாக மணல் கடத்தல் முயற்சியைத் தடுத்து நிறுத்தியதுடன், கடத்தலை மேற்கொள்ளப் பயன்படுத்தப்பட்ட சிவப்பு நிற மோட்டார் சைக்கிளைக் கைப்பற்றியதுடன், சுமார் 20க்கும் அதிகமான மணல் மூடைகள் கைப்பற்றப்பட்டு, மீண்டும் கடற்கரையில் கொட்டப்பட்டன.

மேலும், கைப்பற்றப்பட்ட மோட்டார் சைக்கிள், பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், தப்பியோடிய சந்தேக நபர் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X