2021 ஏப்ரல் 18, ஞாயிற்றுக்கிழமை

100 மதுபானப் போத்தல்களுடன் இருவர் கைது

Princiya Dixci   / 2016 மார்ச் 21 , மு.ப. 06:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.ஜமால்டீன்

அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு, சாகாமம் வீதியில் 100 மதுபானப் போத்தல்களை சட்டவிரோதமாகக் கொண்டு சென்ற இருவரை, நேற்று ஞாயிற்றுக்கிழமை (20) கைதுசெய்ததாக அக்கரைப்பற்றுப் பொலிஸார் தெரிவித்தனர்.  

ஆலையடிவேம்பு பிரதேசத்தில் இருந்து திருக்கோவில் விநாயகபுரம் பிரதேசத்துக்கும் பாலமுனை - திராய்க்கேணி பிரதேசத்துக்கும் கொண்டு செல்லும் போதே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 
இவர்களிடம் இருந்து தலா 50 போத்தல்கள் கைப்பற்றப்பட்டதாக அக்கரைப்பற்றுப் பொலிஸார் தெரிவித்தனர்.  

சந்தேகநபர்கள் இருவரையும், அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றத்தில் இன்று திங்கட்கிழமை (21) ஆஜர்படுத்தவுள்ளதாக அக்கரைப்பற்றுப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .