Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை
Suganthini Ratnam / 2016 ஜூலை 31 , மு.ப. 09:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பி.எம்.எம்.ஏ.காதர்
'மரம் நடுவோம் பசுமை காண்போம்' எனும் தொனிப்பொருளில் அம்பாறை, மருதமுனைப் பிரதேசத்தில் 5,000 மரக்கன்றுகள் நடும் செயற்றிட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
அல் -மருதமுனை சஞ்சிகையின் ஏற்பாட்டில் மருதமுனை அல்-ஹிக்மா வித்தியாலய வளாகத்தில் ஆரம்பிக்கப்பட்டது.
1978ஆம் ஆண்டு இடம்பெற்ற சூறாவளி, 2004ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி அனர்த்தம் காரணமாக மருதமுனையின் இயற்கைவளம் பெரிதும் அழிவுக்குள்ளானது. புதிய வீட்டுத்திட்டங்களின் நிர்மாணமும் இங்கு இயற்கையான பசுமையில் பெரும் தாக்கத்தினை செலுத்தியுள்ளன. இவைகளினை கருத்திற்கொண்டு இயற்கையை மீண்டும் கட்டி எழுப்பும் உன்னத நோக்குடன் 'பசுமையான மருதமுனை' எனும் இலக்கை நோக்கி இத்திட்டம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
முதற்கட்டமாக மருதமுனையிலுள்ள அனைத்துப் பாடசாலைகள், பள்ளிவாசல்கள், மதஸ்தாபனங்கள், அரச நிறுவனங்கள், கடற்கரை, புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள வீட்டுத்திட்டங்கள் என்பனவற்றில் இந்த மரம் நடுகை முன்னெடுக்கப்படவுள்ளது.
மருதமுனையின் எதிர்கால நன்மை கருதி செயற்படுத்தப்படும் இச்செயற்றிட்டத்தில் அனைவரையும் இணைந்துகொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
03 Jul 2025
03 Jul 2025
03 Jul 2025