2021 ஜனவரி 26, செவ்வாய்க்கிழமை

முகாமைத்துவ உதவியாளர்களை நியமிக்குமாறு கோரிக்கை

Suganthini Ratnam   / 2016 ஜூலை 10 , மு.ப. 05:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

-அஸ்லம் எஸ்.மௌலானா

கிழக்கு மாகாண நிர்வாகத்தின் கீழுள்ள அரசாங்கப்  பாடசாலைகளில் மீண்டும் முகாமைத்துவ உதவியாளர்களை நியமிப்பதற்கான நடவடிக்கை எடுக்குமாறு அம்மாகாண அனைத்து முகாமைத்துவ உதவியாளர்கள் தொழிற்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக மேற்படி சங்கத்தின் தலைவர் ஏ.ஜீ.முபாரக், செயலாளர் என்,ரமணீஸ்வரன் ஆகியோர் கையொப்பமிட்டு மாகாணக் கல்விப் பணிப்பாளர் எம்.ரி.ஏ.நிஸாமுக்கு சனிக்கிழமை (09) அனுப்பியுள்ள மகஜரிலேயே இந்தக் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.  

அம்மகஜரில், 'கிழக்கு மாகாணத்தில் உள்ள தேசிய பாடசாலைகளிலும் ஏனைய மாகாணங்களில் உள்ள பாடசாலைகளிலும் நிர்வாக முகாமைத்துவ கடமைக்காக அரச முகாமைத்துவ உதவியாளர் சேவையைச் சேர்ந்த உத்தியோகஸ்தர்கள் கடமையாற்றுகின்றனர். எனினும், கடந்த 03 வருடங்களாக கிழக்கு மாகாண நிர்வாகத்தின் கீழுள்ள அரசாங்கப் பாடசாலைகளில் மாத்திரம் முகாமைத்துவ உதவியாளர்கள் நியமிக்கப்படாமல், அக்கடமை ஆசிரியர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

'மேலும், முகாமைத்துவ உதவியாளர்களின் கடமையைச் செய்வதற்கு தாபன விதிக்கோவை, நிதிப்பிரமானம் ஆகியவற்றில் பரீட்சயம் இருக்க வேண்டும். அத்துடன், ஆசிரியர்களை இக்கடமையில் ஈடுபடுத்துவதால், அநேகமான பாடசாலைகளில் கற்பித்தல் நடவடிக்கை பாதிக்கப்படுகின்றது என்பதையும் பாடசாலைகளில் அலுவலக நிர்வாகம் உரிய முறையில் இடம்பெறவில்லை என்பதையும் கவனத்துக்கு கொண்டு வருகின்றோம்.

எனவே, 1 ஏ.பி., 1 சீ மற்றும் குறித்த தொகைக்கு மேல் மாணவர்களைக் கொண்டுள்ள பாடசாலைகளில் முகாமைத்துவ உதவியாளர் சேவைக்கான ஆளணியை அங்கிகரித்து அப்பாடசாலைகளுக்கு தேவையான முகாமைத்துவ உதவியாளர்களை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகோள் விடுக்கின்றோம்' எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .