Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2015 ஓகஸ்ட் 25 , மு.ப. 03:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரீ.கே.றஹ்மத்துல்லா
தங்களின் மீன்பிடி உபகரணங்களை பாதுகாப்பாக வைப்பதற்குரிய கட்டடங்களை கட்டுவதற்கு பொத்துவில் கரையோர பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகள் தடைவிதிப்பதாக பொத்துவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட குடாக்களி பிரதேச கடற்றொழிலாளர்;கள் தெரிவித்தனர்.
குடாக்களி கடற்கரைப் பிரதேசத்தில் கரைவலை மற்றும் ஆழ்கடல் மீன்பிடிகளில் சுமார்; 25 க்கும் மேற்பட்ட வள்ளங்கள் பயன்படுத்தப்படுவதுடன், 450 க்கும் மேற்பட்ட கடற்றொழிலாளர்கள் தங்களின் குடும்பங்களுக்கான ஜீவனோபாயத்தை மீன்பிடி மூலம் பெற்றுவருகின்றனர்.
மிக நீண்டகாலமாக தாம் கடற்றொழிலில் ஈடுபட்டு வருகின்றபோதிலும், தங்களின்; பெறுமதி வாய்ந்த மீன்பிடி உபகரணங்களை பாதுகாப்பாக வைக்கக்கூடிய கட்டட வசதி இல்லை. இது மாத்திரமின்றி, கடற்றொழிலாளர்கள் இளைப்பாறுவதற்கான மண்டப வசதி மற்றும் மலசலகூட வசதியும் இல்லை. இந்தத் தேவைகளுக்காக வேண்டி கட்டடங்களை தங்களின் சொந்த நிதியில் கட்டுவதற்கு தீர்மானித்தபோதிலும், கரையோர பாதுகாப்புத் திணைக்களம் தடைவிதித்து வருகின்றது.
மேற்படி தேவைகளுக்கான கட்டட வசதியின்மையினால், தங்களின் மீன்பிடி உபகரணங்களை நாளாந்தம் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டுசெல்வதாகவும் இதனால், தாம் சிரமத்தை எதிர்நோக்குவதாகவும் அக்கடற்றொழிலாளர்கள் கூறினர்.
இந்த விடயம் தொடர்பில் அம்பாறை கரையோர பாதுகாப்பு பிரதித்திட்ட இணைப்பு அதிகாரி கே.எம்.சமீர பெரேராவிடம் கேட்டபோது, 'கரையோரப் பிரதேசங்களை பாதுகாக்கும் வகையில் பல சட்ட திட்டங்களை திணைக்களம் முன்னெடுத்து வருகின்றது. குறிப்பாக, கடற்கரைப் பிரதேசங்களில் 300 மீற்றர்;வரை எந்தவிதமான கட்டடங்களையும் அமைக்கமுடியாது. பொத்துவில் சுற்றுலாத்துறை பிரதேசம் என்பதற்காக சில சலுகைகளை கடைப்பிடித்து இங்கு 20 மீற்றர்; எல்லையை வரையறை செய்துள்ளோம்.
கடற்றொழிலாளர்கள் பிரதேச செயலாளரின் அனுமதி பெற்று 10 சதுர அடிக்குள தற்காலிகக் குடிசைகளை; அமைக்கமுடியும்' எனவும் அவர் தெரிவித்தார்.
20 minute ago
39 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
39 minute ago