2021 ஏப்ரல் 19, திங்கட்கிழமை

மீன்பிடிக்கச் சென்ற வயோதிபர் முதலையிடம் சிக்கினார்

Niroshini   / 2016 மார்ச் 23 , மு.ப. 04:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சபேசன்

அம்பாறை, நாவிதன்வெளி, குடியிருப்புமுனை ஆற்றில் மீன்பிடிக்கச் சென்ற வயோதிபர் ஒருவர் முதலைக்கடிக்கு இலக்காகிய சம்பவமொன்று, செவ்வாய்க்கிழமை(22) இரவு இடம்பெற்றுள்ளது.

இதில் படுகாயங்களுக்குள்ளான வயோதிபர் கல்முனை ஆதார வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குடியிருப்புமுனை கிராமத்தைச் சேர்ந்;த சீ.ருக்மாங்கரன் (வயது 64 ) என்பவரே இவ்வாறு முதலைக் கடிக்கு இலக்காகியுள்ளார்.

குடியிருப்புமுனை ஆற்றில் மீன்பிடித்துக்கொண்டிருந்த குறித்த வயோதிபரை முதலை பிடித்து நீருக்குள் இழுத்துள்ளது.

இதன்போது, குறித்த வயோதிபர் அபயக்குரல் எழுப்பியதையடுத்து, சக மீனவர்களால் காப்பாற்றப்பட்டு கல்முனை ஆதார வைத்தியசாலையில்  அனமதிக்கப்பட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .