2021 ஏப்ரல் 15, வியாழக்கிழமை

மீள்குடியேற்றிய மக்களுக்கு வீடுகள் கையளிப்பு

Niroshini   / 2016 மார்ச் 26 , மு.ப. 07:04 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.கார்த்திகேசு

திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தங்கவேலாயுதபுரம்,கஞ்சிகுடியாறு கிராமங்களில் மீள் குடியேறிய மக்களுக்கு புதிதாக அமைக்கப்பட்ட 201 வீடுகளில் 100 வீடுகள் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் புனர்வாழ்வு மீள்குடியேற்ற இந்து சமய அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனால்  மக்களிடம் கையளிக்கப்பட்டன.


இந்நிகழ்வு,   இன்று சனிக்கிழமை, திருக்கோவில் பிரதேச செயலாளர் எஸ்.ஜெகராஜன் தலைமையில்  இடம்பெற்றது.

இதன்போது, திருக்கோவில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற பொதுக் கூட்டத்தில் அமைச்சரால் வீடுகளுக்கான  பத்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இவ்வீடுகள் தலா 2 இலட்சம் ரூபாய் செலவில் புனர்வாழ்வு அமைச்சினால் நிர்மானிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் பொத்துவில் பிரதேச செயலாளர் பிரிவில் கதிர்காம யாத்திரிகைகளுக்கான யாதிரியகள் தங்கிச் செல்லும் மண்டபத்துக்கான அடிகல் நட்டுவைத்ததுடன், மாவட்டத்தில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட  கிராமங்களுக்குச் சென்று மக்களின் குறைநிறைகளை கேட்டறிந்து கொண்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X