2020 நவம்பர் 26, வியாழக்கிழமை

'முஸ்லிம் தலைவர்கள் பேரம் பேசி தமது சமூகத்தை பலப்படுத்தியுள்ளனர்'

Suganthini Ratnam   / 2016 மார்ச் 06 , மு.ப. 08:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.சுகிர்தகுமார்  

எந்த ஆட்சியாக இருந்தாலும் முஸ்லிம் தலைவர்கள் தங்களுக்குத் தேவையான அமைச்சுகளை பேரம் பேசி பெற்றுக்கொண்டு, தங்களின் சமூகத்தை பொருளாதார ரீதியிலும் வேலைவாய்ப்பு ரீதியிலும் பலப்படுத்தியுள்ளதாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மஞ்சுல பெர்ணாந்து தெரிவித்தார்.

இருந்தபோதிலும், அன்று முதல் இன்றுவரை தமிழ்த் தலைவர்கள் அவ்வாறு செயற்படவில்லை. அதனாலேயே, தமிழ்ச் சமூகம் பின்தள்ளப்பட்டு வருகிறது. ஒரு சமூகம் பெறவேண்டியதை இன்னுமொரு சமூகம் பெற்று அனுபவித்து வந்தது. இனிமேலும் இந்த நிலைமை தொடரக் கூடாதெனவும் அவர் கூறினார்.

வேலைவாய்ப்புத் தொடர்பாக இளைஞர், யுவதிகளுடன் ஆலையடிவேம்பு கலாசார மண்டபத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கலந்துரையாடலின்போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், 'நல்லாட்சிக்கு துணை நின்ற தமிழர்கள் ஏமாற்றப்பட்டு வருகின்றனர். இதற்குத் தமிழ்த் தலைவர்களும் காரணம் ஆவர்' என்றார்.

'எத்தடைகள் வந்தாலும், ஜனாதிபதியும் பிரதமரும்  அதனை எதிர்கொண்டு நல்லாட்சிக்கு துணை நின்ற தமிழ் மக்களுக்கான சிறந்த தீர்வுத்திட்டத்தை வழங்க உறுதி பூண்டுள்ளமையை தமிழ் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். மேலும், வேலைவாய்ப்பு வழங்கப்படும்போது பட்டதாரிகள் உள்ளிட்ட தமிழர்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களை தட்டிக்கேட்க யாரும் முன்வரவில்லை. இருப்பினும் இனிவரும் காலத்தில் தானும் தனது கட்சியும் தமிழ் மக்களுக்கு கிடைக்க வேண்டியதை பெற்றுக்கொடுக்க எப்போதும் பின்னிற்கப் போவதில்லை' எனவும் அவர் மேலும் கூறினார்.

மின்சாரம் இல்லாத வீடுகளுக்கு இலவச மின் விநியோகம், குறைவேலைகளுடன் உள்ள வீடுகளுக்கு சீமெந்து பக்கெட்டுகள் வழங்கல், சுயதொழிலாளர்களுக்கு நிதியுதவி, விவசாயிகளுக்கு உதவி ஆகியவை  போன்ற  தன்னால் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் இவ்வுதவிகள் தேவைப்படுவோர் தன்னுடன் தொடர்பு கொள்ளுமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--