2021 ஜனவரி 20, புதன்கிழமை

யானைக்கு காயமாம்: மிருக வைத்தியர் படிக்கச் சென்றுவிட்டாராம்

Princiya Dixci   / 2016 ஜூலை 17 , மு.ப. 11:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

-வசந்த சந்திரபால   

காட்டுயானையொன்று வால் அறுந்த நிலையில் பெருஞ் சிரமத்துடன் அம்பாறை கொட்டவெஹர காட்டுப்பகுதியில் உலவி வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். 

குறித்த பகுதியில் இராணுவமுகாமில் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரி இருந்தும், குறித்த யானையின் காயத்துக்கு  பரிகாரங்களை மேற்கொள்ளவில்லை என மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். 

இக்குற்றச்சாட்டு தொடர்பில், வனஜீவராசிகள் திணைக்களத்தின் அத்தியட்சகர் டி.எஸ்.கே.பிதிரத்னவிடம் கேட்ட போது, தங்களுக்கு இவ்விடயம் தொடர்பில் தெரியாது எனவும், அம்பாறை வனஜீவராசிகள் சுகாதார ஒன்றியத்தின் ஏற்பாட்டில் லுணுகம்வெஹெரையில் நடைபெறும் மிருக வைத்தியர்களுக்கான பயிற்சி நெறியில் கலந்து கொள்வதற்காக எமது மிருக வைத்தியர் சென்றுள்ளதாகவும் தெரிவித்த அவர், இவ்விடயம் தொடர்பில் கவனஞ் செலுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .