2021 மே 06, வியாழக்கிழமை

யானை தாக்கி குடும்பஸ்தர் உயிரிழப்பு

Suganthini Ratnam   / 2015 செப்டெம்பர் 29 , மு.ப. 04:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கார்த்திகேசு,வி.சுகிர்தகுமார்

அம்பாறை, திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஸ்ரீவள்ளிபுரம் கிராமத்தைச் சேர்ந்த இராசையா ஜீவன்குமார் (வயது 22) என்ற இளம் குடும்பஸ்தர், இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை காட்டு யானையின் தாக்குதலுக்குள்ளாகி மரணமடைந்துள்ளார்.  

இவரும் மற்றுமொருவரும் விறகு வெட்டுவதற்காக காட்டுக்கு சென்றுகொண்டிருந்தபோது, அங்கு நின்ற காட்டு யானை மேற்படி குடும்பஸ்தரை தாக்கியுள்ளது. இந்நிலையில், வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லும் வழியில் இவர் உயிரிழந்துள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர்.

இவருடன் சென்ற மற்றைய நபர் பாதுகாப்பாக தப்பிவந்துள்ளார்.  

இந்தச் சம்பவம் தொடர்பில் திருக்கோவில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .