2021 ஏப்ரல் 12, திங்கட்கிழமை

விண்ணப்பம் கோரல்

Niroshini   / 2016 மார்ச் 23 , மு.ப. 10:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா

கிழக்கு மாகாண பாடசாலைகளில் நிலவுகின்ற கணித, விஞ்ஞான மற்றும் ஆங்கில ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளதாக  பொதுச் சேவை ஆணைக்குழுவின் செயலாளர் எச்.ஈ.டபிள்யு.ஜி.திசாநாயக்க இன்று புதன்கிழமை தெரிவித்தார்.

கணித, விஞ்ஞான பட்டதாரிகள் மற்றும் ஆங்கில டிப்ளோமாதாரிகள் இப்பதவிக்கு விண்ணப்பிக்கமுடியும்.

திறந்த போட்டிப்பரீட்சையூடாக இந்நியமனங்கள் வழங்கப்படவிருக்கின்றன. இவர்கள் இலங்கை ஆசிரியர் சேவையின் 3-1(அ) மற்றும் 3-1(இ) தரத்துக்கு உள்வாங்கப்படுவார்கள்.

கிழக்கு மாகாணத்தின் மாகாணப் பாடசாலைகளில் 6-11 வகுப்புகளில் நிலவுகின்ற ஆசிரியர் தட்டுப்பாட்டை நிரப்புவதற்கே இப்புதிய ஆட்சேர்ப்பு இடம்பெறவிருக்கிறது.

விண்ணப்ப முடிவுத்திகதி, எதிர்வரும் ஏப்ரல் மாதம் 12ம் திகதியாகுமென கிழக்கு மாகாண பொதுச்சேவை  ஆணைக்குழுவின் செயலாளர் எச்.ஈ.டபிள்யு.ஜி.திசாநாயக்க மேலும் தெரிவித்தார்.

மேலதிக தகவல்களுக்கு கிழக்குமாகாண இணையத்தளத்தை பார்வையிடலாமெனவும் அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .