2021 ஜனவரி 19, செவ்வாய்க்கிழமை

விண்ணப்பம் கோரல்

Kogilavani   / 2016 ஜூலை 08 , மு.ப. 06:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா

அம்பாறை வலயக் கல்வி அலுவலகத்தில் வெற்றிடமாகவுள்ள வலயக் கல்விப் பணிப்பாளர்; பதவிக்கு, இலங்கை கல்வி நிர்வாக சேவையிலுள்ள தகுதி வாய்ந்த உத்தியோகத்தர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவின் செயலாளர் எச்.ஈ.டபிள்யூ.ஜி. தியாநாயக்க இன்று  வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

இலங்கை கல்வி நிர்;வாக சேவையிலுள்ள தரம் 1, தரம் 11 அல்லது தரம் 111ச் சேர்;ந்த உத்தியோகத்தர்;, தரம் 111ச் சேர்ந்த உத்தியோகத்தர்கள் குறைந்த பட்சம் 5 வருட செயலூக்கம்மிக்கதும் திருப்திகரமானதுமான சேவையை பூர்;த்தி செய்தவர்களாக இருத்தல் வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

60 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டுமெனவும் கேட்கப்பட்டுள்ளது. தற்போது கிழக்கு மாகாணத்தில் கடமைபுரியும் இலங்கை கல்வி நிர்வாக சேவையிலுள்ள உத்தியோகத்தர்;கள் இதற்கு விண்ணப்பிக்க முடியுமென அவர் அறிவித்துள்ளார்.

விண்ணப்பப் படிவத்தை எதிர்ர்வரும் 29ம் திகதிக்கு முன்னர்; செயலாளர், மாகாண பொதுச் சேவை ஆணைக்குழு, கிழக்கு மாகாணம், 198 உடதுறைமுக வீதி, திருகோணமலை எனும் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .