2021 மார்ச் 07, ஞாயிற்றுக்கிழமை

வெள்ளம் காரணமாக 2,050 ஏக்கர் வேளாண்மைச் செய்கை பாதிப்பு

Suganthini Ratnam   / 2016 மே 30 , மு.ப. 11:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எஸ்.எம்.முஜாஹித்

அம்பாறை மாவட்டத்தின் சவளக்கடை, சேனைக்குடியிருப்பு, பெரியநீலாவணை ஆகிய கமநல சேவை கேந்திர நிலையப் பிரிவுகளில் 2,050 ஏக்கர் வேளாண்மைச் செய்கை வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாக சவளக்கடை கமநல சேவை கேந்திர நிலையத்தின் விவசாய அபிவிருத்தி உத்தியோகஸ்தரும் சேனைக்குடியிருப்பு மற்றும் பெரியநீலாவணை கமநல சேவை கேந்திர நிலையங்களின்; பதில் விவசாய அபிவிருத்தி உத்தியோகஸ்தருமான வி.விநோதன், நேற்றுத் திங்கட்கிழமை தெரிவித்தார்.

சவளக்கடை கமநல சேவை கேந்திர நிலையப் பிரிவில் 1020 ஏக்கர் வேளாண்மையும்; சேனைக்குடியிருப்பு கமநல சேவை கேந்திர நிலையப் பிரிவில் 650 ஏக்கர் வேளாண்மையும் பெரியநீலாவணை கமநல சேவை கேந்திர நிலையப் பிரிவில் 380 ஏக்கர் வேளாண்மையும் பாதிக்கப்பட்டுள்ளன.  

இதில் பாதிக்கப்பட்டுள்ள 356 விவசாயிகளுக்கு நட்டஈடு பெற்றுக்கொடுப்பதற்காக இது தொடர்பான சேத விவரங்கள் சேகரிக்கப்பட்டு மாவட்ட விவசாயத் திணைக்களத்துக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

அண்மையில் ஏற்பட்ட மழை வெள்ளம் காரணமாக சேனைக்குடியிருப்பு கமநல சேவை கேந்திர நிலையத்தின் கீழுள்ள நற்பிட்டிமுனை கிழல் மேல் கண்டங்களில் செய்கை பண்ணப்பட்ட 600 ஏக்கருக்கும் மேற்பட்ட வேளாண்மைச் செய்கை பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர். ஏக்கருக்கு 47ஆயிரம் ரூபாய்க் மேல் தாம் இதுவரையில் செலவு செய்துள்ளதாகவும் அவ்விவசாயிகள் கூறினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .