2021 மே 12, புதன்கிழமை

விழிப்புணர்வு கருத்தரங்கு

Niroshini   / 2015 செப்டெம்பர் 29 , மு.ப. 10:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா

இலங்கையின் மத சௌஜன்னியத்தை ஏற்படுத்துதல் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு இன்று செவ்வாய்க்கிழமை அக்கரைப்பற்று பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

இனத்துவ கற்கை நெறிகளுக்கான நிறுவனத்தின் ஏற்பாட்டில்,அக்கரைப்பற்று உதவி பிரதேச செயலாளர் எம்.ஏ.றஸான் தலைமையில் நடைபெற்ற இவ்விழிப்புணர்வு கருத்தரங்கில் அக்கரைபற்று பிரதேச செயல கிராம உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் 100ற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

மனித உரிமைகளும் மதத்தினூடாக சமூக வாழ்வை ஏற்படுத்தல் எனும் தொனிப் பொருளில் வளவாளர்களாக சட்டத்தரணி சஜித் அகமட், அபிவிருத்தி உத்தியோகத்தர் ஐ.எல்.எம். ஹாசிம், ஏ.எம். றம்ஸி, அதிபர் ஏ.எல்.கே. முகம்மட் ஆகியோர் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .