2020 நவம்பர் 29, ஞாயிற்றுக்கிழமை

'விவேகமுள்ள பிரஜைகள் சங்கம்' அங்குரார்ப்பணம்

Suganthini Ratnam   / 2016 மார்ச் 07 , மு.ப. 08:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.சி.அன்சார்

அம்பாறை, சம்மாந்துறைப் பிரதேசத்தில் மக்கள் விடுதலை முன்னணியின்  'விவேகமுள்ள பிரஜைகள் சங்கம்'  அங்குரார்ப்பண நிகழ்வு, மக்கள் விடுதலை முன்னணியின் சம்மாந்துறைத்தொகுதி அமைப்பாளர் எஸ்.ஏ.எம்.புஹாரியின் சம்மாந்துறைப் பிரதேசத்திலுள்ள இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை (06) நடைபெற்றது.

இப்பிரதேச மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காகவே இச்சங்கம் உருவாக்கப்பட்டுள்ளது. இச்சங்கத்தில் மக்கள் விடுதலை முன்னணி அங்கத்தவர்கள் மாத்திரமின்றி, அனைத்துத் தரப்பினரும் இணைய முடியுமென மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்தார்.

இச்சங்கத்தின் தலைவராக எம்.வை.எம்.ஏ.காதர், செயலாளராக ஏ.எஸ்.எம்.புஹாரி, பொருளாராக எம்.ஏ.சின்னராசா ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--