2020 ஒக்டோபர் 29, வியாழக்கிழமை

தடைசெய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 11 பேர் கைது

Suganthini Ratnam   / 2013 ஓகஸ்ட் 02 , மு.ப. 03:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

தடைசெய்யப்பட்ட  வலைகளைப் பாவித்து மீன்பிடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 11 பேரை நேற்று வியாழக்கிழமை ஆலையடிவேம்பு பிரதேச செயலக மீன்பிடித் திணைக்கள அதிகாரிகள் சுற்றிவளைத்துப் பிடித்துள்ளனர்.

இந்நிலையில், கைதுசெய்யப்பட்ட 11 பேரையும் அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் ரி.சரவணராஜாவின் முன்னிலையில் ஆஜர்படுத்தியபோது ஒவ்வொருவருக்கும் 5,000 ரூபா தண்டம் விதித்து தீர்ப்பளித்த நிலையில் விடுவிக்கப்பட்டனர்.

மீன்பிடித்திணைக்களத்தால் தடைசெய்யப்பட்ட சுருக்கு வலை, நைலோன் வலைகளை பாவித்து ஆலையடிவேம்பு பிரதேசத்தில் இவர்கள் மீன்பிடித்து வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கைதுசெய்யப்பட்ட 11 பேரும் ஆலையடிவேம்பு மற்றும் அட்டாளைச்சேனை பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாவர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .