2020 செப்டெம்பர் 25, வெள்ளிக்கிழமை

வாகன விபத்தில் 12 பேர் காயம்

Super User   / 2010 செப்டெம்பர் 22 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

alt                    (எம்.ஐ.எம்.அஸ்ஹர்)        

                                    
அம்பாறை-கண்டி வீதியில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் 12 பேர் பலத்த காயத்துக்குள்ளாகியுள்ளனர்.

அம்பாறை நகர பஸ் நிலையத்தில் இருந்து சுமார் 500 மீற்றருக்கு அப்பால் பிரயாணிகளை ஏற்றிக் கொண்டு அம்பாறை நோக்கி வந்த தனியார் பஸ்ஸுடன் வீரகொடையில் இருந்து பிரயாணிகளை ஏற்றிக் கொண்டு வந்த இலங்கை போக்குவரத்து சபை பஸ் பின்புறமாக மோதியதனாலே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

இவ்விபத்தில் காயமடைந்தவர்களில் 5 பெண்களும், 4 ஆண்களும் , 3 சிறுவர்களும் உள்ளடங்குகின்றனர். இவர்கள் அம்பாறை பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அம்பாறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--