2020 செப்டெம்பர் 19, சனிக்கிழமை

அம்பாறை மாவட்ட உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தபால் மூலம் வாக்களிக்க 13,037 பேர் தகுதி

Super User   / 2011 பெப்ரவரி 23 , பி.ப. 01:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சி.அன்சார்)

மார்ச் மாதம் அம்பாறை மாவட்டத்தில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலில்; தபால் மூலம் வாக்களிப்பதற்காக 13,037 பேர் தகுதி பெற்றுள்ளதாக அம்பாறை மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் எம்.எம்.எஸ்.கே.பண்டார மாப்பா தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டத்தில் தபால் மூலம் வாக்களிப்பதற்காக 18,113 பேர் விண்ணப்பித்திருந்தனர். இவர்களில் 5076 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு 13037 பேரின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை தேர்தல் கடமைகளில் ஈடுபடவுள்ள உத்தியோகத்தர்களுக்கு விளக்கமளிக்கும் பயிற்சி வகுப்புக்கள் தற்போது நடைபெற்று வருவதாக பண்டார மாப்பா மேலும் தெரிவித்தார்.

தபால் மூல வாக்களிப்பு மார்ச் மாதம் 08ஆம் மற்றும் 09ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளமை குறிப்பிட்த்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--