2025 ஜூலை 12, சனிக்கிழமை

131 மில்லியன் ரூபா செலவில் விடுதித் தொகுதி

Kogilavani   / 2014 ஏப்ரல் 21 , மு.ப. 03:30 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.ஜே.எம்.ஹனீபா


இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சம்மாந்துறையிலுள்ள பிரயோக விஞ்ஞான பீட மாணவர்களுக்காக 131 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்படவுள்ள மூன்று மாடிகளைக் கொண்ட நவீன வசதிகளுடன் கூடிய விடுதித் தொகுதிக்கான அடிக்கல் நடும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை  (20) சம்மாந்துறை அன்வர் இஸ்மாயீல் சதுக்க பிரதேசத்திலுள்ள விடுதி வளாகத்தில் நடைபெற்றது.
 
இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மாயீல் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்கா கலந்துகொண்டார்.
 
அதிதிகளாக உயர்கல்வி அமைச்சின் செயலாளர் கலாநிதி சுனில் ஜயந்த நவரத்ன, பதிவாளர் எச்.எம்.சத்தார், பிரயோக விஞ்ஞான பீடத்தின் பீடாதிபதி கலாநிதி எம்.ஐ.எஸ்.சபீனா, விஞ்ஞான பீடத்தின் சிரேஷ்ட உதவிப் பதிவாளர் பீ.எம்.முபீன்  பலர் கலந்துகொண்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .