2020 ஒக்டோபர் 30, வெள்ளிக்கிழமை

கல்முனை விபத்தில் மூவர் பலி:16 பேர் காயம்

Kanagaraj   / 2014 ஏப்ரல் 13 , மு.ப. 12:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.எம்.எம். றம்ஸான்,எஸ்.எல்.அப்துல் அஸீஸ்,ஏ.ஜே.எம்.ஹனீபா

கல்முனைக்குடி முகைதீன் ஜும் ஆப் பள்ளிவாசலுக்கு முன்பாகவுள்ள வளைவில் இடம்பெற்ற பஸ் விபத்தில் மூவர் பலியானதுடன் 16 பேர் படுகாயமடைந்துள்னர்.

கொழும்பில் இருந்து அக்கரைப்பற்று நோக்கி பயணித்த அதி சொகுசு பஸ் வண்டியொன்றும் வவுனியா செல்வதற்காக கல்முனை நகரை நோக்கி பயணித்த அசோக்லேலண்ட் பஸ் வண்டியொன்றும்; நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளானது.

காயமடைந்தவர்கள் அருகிலுள்ள கல்முனை அஸ்றப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் மரணித்தவர்களின் ஜனாசாக்களும் வைத்தியசாலையிலேயே வைக்கப்பட்டுள்ளன.

மரணித்தவர்களில் ஆண் ஒருவரும் பெண்கள் இருவரும் அடங்குகின்றனர். மரணித்தவர்கள் கொழும்பு ஆமர் வீதியைச் சேர்ந்த 43 வயதுடைய சல்மான் பாரிஸ் , சாய்ந்தமருது அல் ஹிலால் வீதியைச் சேர்ந்த 48 வயதுடைய சலீமா தமீம் ( மின்னா ) , அக்கரைப்பற்று மத்திய வீதியைச் சேரந்த 55 வயதுடைய பீபி பாத்திமா என அடையாளம் காணப்பட்டுள்ளது.

வவுனியா நோக்கிச் சென்ற பஸ்ஸில் மதுபானத்துடன் போத்தலொன்று காணப்பட்டமையினால் அவ் வண்டியின் சாரதி மதுபோதையில் இருந்திருக்கலாமென கல்முனை பொலிஸார் சந்தேகம் தெரிவித்தனர்.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்முனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .