2020 ஒக்டோபர் 25, ஞாயிற்றுக்கிழமை

சம்மாந்துறை பிரதேச அபிவிருத்திக்காக 177 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

Kogilavani   / 2014 ஏப்ரல் 08 , மு.ப. 04:52 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.ஜே.எம்.ஹனீபா

'அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை பிரதேசத்தின் அபிவிருத்திக்காக பொருளாதார அபிவிருத்தி அமைச்சு 177 மில்லியன் ரூபாவையும் வாழ்வாதார அபிவிருத்திக்காக 20 மில்லியன் ரூபாவினையும் ஒதுக்கியுள்ளது. இந்த நிதிகள் கிராம மட்ட அமைப்புக்களின் மூலம் முன்னுரிமை அடிப்படையில் தெரிவு செய்யப்படுகின்ற அபிவிருத்திப் பணிகளுக்காக செலவு செய்யப்படவுள்ளது'  என கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர் தெரிவித்தார்.

சம்மாந்துறை சபூர் வித்தியாலயத்தில் 5 ஆம் திகதி சம்மாந்துறைப் பிரதேச செயலாளர் ஏ.மன்சூர் தலைமையில் நடைபெற்ற நிறைவான  இல்லம் வழமான தாயகம் எனும் மக்கள் ஒன்று கூடலும் நடமாடும் சேவையும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்ததார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

'சம்மாந்துறைப்; பிரதேசம் பலதுறைகளிலும் பாரிய பின்னடைவை அடைந்ததுடன் விசேடமாக பொருளாதார ரீதியாக பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தமை சகலரும் அறிந்த விடயமாகும்.
 
இந்த பிரதேசத்தின் அபிவிருத்தி விடயத்தில் மக்கள் விழிப்பாக இருந்து செயற்பட வேண்டும். அவ்வாறு செயற்படுவதன் மூலமே இந்தப் பிரதேசத்தை சரியான முறையில் அபிவிருத்தி செய்ய முடியும்.

ஒரு சுகாதார கிளினிக் நிலையம்; இல்லாது இப்பிரதேச மக்கள் கஷ;டத்தை எதிர்நோக்குவதாக இங்கு தெரிவிக்கப்பட்டது. அதனை அமைப்பதற்காக 12 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டும் அதனை நிர்மாணிப்பதற்கான இடம் இனங்காணப்படாதுள்ளது. அதனை நிர்மாணிப்பதற்கான இடத்தை விரைவில் இனங்கானுமாறு கேட்டுக் கொள்கின்றேன்.

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சராக கடமையாற்றி வருகின்றேன். அதற்கான கைங்கரியமாக சம்மாந்துறை அன்வர் இஸ்மாயீல் ஆதார வைத்தியசாலையினை சகல வசதிகளும் கொண்ட கிழக்கு மாகாணத்தில் ஒரு முன்மாதிரியான வைத்தியசாலையாக அபிவிருத்தி செய்வதற்கான சகல வேலைத்திட்டத்தினை முன்னனெடுக்கவுள்ளேன்' என  தெரிவித்தார்.
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--