2021 மார்ச் 07, ஞாயிற்றுக்கிழமை

18,000 றம்புட்டான்கள் அழிப்பு

Yuganthini   / 2017 ஜூலை 23 , பி.ப. 03:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.சுகிர்தகுமார் 

மனித நுகர்வுக்குப் பொருத்தமற்ற, பழுதடைந்த சுமார் 18,000 றம்புட்டான் பழங்கள், திருக்கோவில் பிரதேசத்தில் கைப்பற்றப்பட்டு, அழித்தொழிக்கப்பட்டுள்ளன.

மாவட்ட மேற்பார்வை பொதுச்சுகாதாரப் பரிசோதகர் பி.பேரம்பலத்தின் பணிப்புரைக்கமைவாக, பொதுச்சுகாதாரப் பரிசோதகர்கள் மேற்கொண்ட திடீர்ச் சுற்றிவளைப்பின் போதே, இவை கைப்பற்றப்பட்டுள்ளன.

திருக்கோவில் ஆலய உற்சவத்தில் கலந்துகொள்ளும் பக்தர்கள் மற்றும் கதிர்காம பாத யாத்திரிகர்களின் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் முகமாக, இச்சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .