2020 ஒக்டோபர் 28, புதன்கிழமை

மறைத்து வைக்கப்பட்ட 2 உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கிகள் மீட்பு

Suganthini Ratnam   / 2013 ஜூலை 22 , மு.ப. 04:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கனகராசா சரவணன்

அம்பாறை மாவட்டத்தின் அக்கரைப்பற்று நகரப் பகுதியிலுள்ள கடையொன்றின் பின்பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 2 உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கிகளை நேற்று ஞாயிற்றுக்கிழமை மீட்டுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.

கிடைத்த இரகசிய தகவலுக்கமைய குறித்த இடத்திற்குச் சென்று 2 உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கிகளை மீட்டுள்ளதாகவும் இந்த உள்ளூர் தயாரிப்புத் துப்பாக்கிகள் மரப்பலகைகளுக்கு கீழ் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் பொலிஸார் கூறினர்.

இதன்போது உள்ளூர் தயாரிப்பு கைத்துப்பாக்கி ஒன்றும்;; ஒரு அடி நீளமுள்ள கட்டுத்துவக்கு ஒன்றும் மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

இது தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--