2020 ஒக்டோபர் 26, திங்கட்கிழமை

சாய்ந்தமருதில் குப்பைகளிலிருந்து உரம் தயாரிக்க நடவடிக்கை

Suganthini Ratnam   / 2010 ஓகஸ்ட் 15 , பி.ப. 01:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.ஐ.எம்.அஸ்ஹர்)

சாய்ந்தமருது பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட வீடுகளில் நாளாந்தம் சேரும் குப்பைகூழங்கள் மூலம் உரம் தயாரிக்கும் வேலைத்திட்டமொன்றினை சாய்ந்தமருது கமநலசேவை மத்திய நிலையம் முன்னெடுத்துச் செல்லவுள்ளது.

வீடுகளில் சேகரிக்கப்படும்  குப்பைகூழங்கள் அண்மைக்காலமாக வீதியோரங்களிலும் தரிசான வளவுகளிலும் நீர்நிலைகளுக்கு அண்மையிலும் கொட்டப்பட்டு வருகின்றன. இதனால் சூழல் மாசடைவதுடன் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்றுநோய்கள்  பரவக்கூடிய அபாயகரமான நிலையொன்று தோன்றியிருந்தது.

இதனை கருத்திற்கொண்ட சாய்ந்தமருது கமநலசேவை மத்திய நிலைய அதிகாரிகள் இப்பிரதேசத்தில் வீட்டுத் தோட்டப் பயிர்ச்செய்கையினை ஊக்குவித்து வீடுகளில் சேரும் குப்பைகூழங்களில் அழிவடையக்கூடிய கழிவுகள் மூலம் உரம் தயாரித்து தாம் பயிரிடும் பயிர்களுக்கு பயன்படுத்த முடியும் என சாய்ந்தமருது விவசாய போதனாசியிரியர் எம்.எம்.எம்.ஜெமீல் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--